கர்நாடக மாநிலம் சிக்கோனில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் ராஜநாகம் ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் 224 தொகுதிக்கும் கடந்த 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 2165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3,88,51807 வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் 36 மையங்களிலும் ஒட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரு சில நேரங்களில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஓட்டு எண்ணிக்கையில் மதியத்துக்குள் எந்த கட்சி முன்னிலை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரியும். பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டால், கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்புகளை உள்ளது. 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ்,மதச்சார்பற்ற ஜனதா தளம் இந்த மூன்று கட்சிகளுக்கும் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 124 இடங்களிலும்,பா.ஜ.க 69 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருவதால் இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.
இந்த நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான சிக்கோனில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது பா.ஜ.க அலுவலகத்தில் ராஜநாகம் ஒன்று புகுந்ததுள்ளது. இதனைப் பார்த்து அங்குக் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த அதிகாரிகள் நல்ல பாம்பைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இதனால் பாஜக அலுவலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
- இரா.விமல்ராஜ்