அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

ஏற்கனவே, வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சென்னையில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு, 5 வாகனங்களில் வந்த 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2011 முதல் 2016 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஏற்கனவே, இதே புகாரின் பேரில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தற்போது, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com