தமிழ்நாட்டில் 31 -வது தென்மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மதிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றை பரஸ்பர ஒப்பந்தம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மூலம் சுமுகமாக தீர்த்து வைப்பதாகும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தற்போது, பா.ஜ.கவுக்கும், தி.மு.கவுக்கும் இடையே அரசியல் ரீதியாகவும், ராஜாங்க ரீதியிலும் கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
ஒரே மேடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 30 -வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் மொத்தம் 26 பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டன.
இதில் 9 பிரச்னைகள் ஆந்திரா மறுசீரமைப்பு தொடர்பானவை. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளாகும். இதனை பரஸ்பரம் தீர்க்க வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், தென் மண்டல கவுன்சிலின் அனைத்து மாநிலங்களும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.