தஞ்சாவூர்: முதலமைச்சருடன் இருக்கும் போட்டோவை காட்டி ரூ.59 லட்சம் மோசடி - ‘பலே’ ஆசாமி மீது பகீர் புகார்

முதல்வருடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி ஏமாற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தஞ்சாவூர்: முதலமைச்சருடன் இருக்கும் போட்டோவை காட்டி ரூ.59 லட்சம் மோசடி - ‘பலே’ ஆசாமி மீது பகீர் புகார்
Jayakumar a

’’வேலை வாங்கித் தருவதாக பெற்ற ரூ.59 லட்சம் பணத்தை முதல்வரிடம் கொடுத்து விட்டேன். உங்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்’’ எனக்கூறி, முதல்வருடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி ஏமாற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கிருங்காட்டு கோட்டை, அண்ணா நகர் தெருவை சேர்ந்த ரீட்டா, சோழபாண்டியன், யுவராஜ், டில்லி பாபு, ஸ்ரீநாத், ரகுமானந்த் ஆகியோரிடம் தஞ்சாவூர் வடக்கு பூக்கொல்லை தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் மின்வாரியத்துறை, கிராம நிர்வாக அலுவலர், பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 59 லட்சம் ரூபாயை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால், பணம் கொடுத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலையும் கிடைக்காதால், பணத்தை கொடுத்தவர்கள் மும்மூர்த்தியிடம் திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், மூர்த்தி பணத்தைத் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்நிலையில், அண்மையில் மும்மூர்த்தியை தொடர்பு கொண்டு பணத்தைத் கேட்டதற்கு, ’’தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. முதல்வர் எனக்கு நெருக்கமானவர். பணம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டேன்’’என்று கூறியவர், அவருடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி, ’’ விரைவில் உங்களுக்கு இரண்டு மாதத்தில் வேலை கிடைத்துவிடும்’’எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியது போல் வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ’’பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்காக மும்மூர்த்தி எங்களிடம் 59 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால், பணம் கொடுத்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகியும் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். தற்போது முதலமைச்சரிடம் பணத்தை கொடுத்து விட்டதாகவும், முதல்வருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காட்டினார். ஆனால், இதுவரை வேலை கிடைக்கவில்லை. எனவே முதலமைச்சர் பெயரில் மோசடி செய்த அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எங்களது பணத்தை பெற்றுத் தர வேண்டும்’’ என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com