தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை கொடுங்கையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்துவைத்தார். முதல் கட்டமாக விஜய் பயிலகம் இன்று 14 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் 'தளபதி விஜய் பயிலகம்' தொடங்கப்பட்டது.
விரைவில் தமிழ் நாடு முழுவதும் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விஜய்யின் சொல்லுக்கிணங்க தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 14 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
மாணவர்கள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும். மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். முதல்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்கப்படுகிறது. 10, +12 வகுப்பு மாணர்களுக்கு தேவைக்கு ஏற்ப எடுக்கப்படும்.
தளபதி விஜய் பயிலகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவது குறித்து விஜய்யுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.