அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவை மீறி வேடசந்தூர் பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். அப்படி வாங்க வேண்டும் என்று எந்த உத்தரவும் வரவில்லை என டாஸ்மார்க் ஊழியர் பகிரங்க வாக்குமூலம் அளிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கரூர் ரோட்டில் இரண்டு அரசு மதுபான கடைகள், ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மதுபான கடை, குங்கும காளியம்மன் கோவில் அருகே மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் உள்ள மதுபான பார்கள் கடந்த ஐந்து நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால், குடிமகன்கள் மிகவும் அவதிக்குள்ளாகி பேருந்து நிலையம் அருகிலும் சாலையையும் குடித்துவிட்டு உலா வருகிறார்கள். இதுகுறித்து விசாரிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எந்த மதுபான கடைகளுக்கும் அனுமதி இல்லாமல் நடைபெற்று உள்ளதாகவும், தி.மு.க கட்சிக்குள் உள்கட்சி பூசல் நடப்பதால் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.
டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் 2000 ரூபாய் கொடுத்து மது பாட்டில் கேட்டால் பணம் வாங்க மறுப்பதாக குடிமகன்கள் குற்றம்சாட்டுகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி இரு தினங்களுக்கு முன்பு ’டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 பணத்தை வாங்க மறுக்கக்கூடாது’’ என்று பகிரங்கமாக அறிவித்து இருந்தார். இருப்பினும் வேடசந்தூர் பகுதிகளில் உள்ள நான்கு மதுபானக் கடைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுக்கின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவை மீறும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என கேள்வி எழுப்புகின்றனர்.