தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "இன்னும் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை. ஆற்றுக்குத் தண்ணீர் வந்தால் மட்டும் போதாது, கிளை வாய்க்கால்களுக்கும் தண்ணீர் வர வேண்டும். அப்போதுதான் முழுமையான பாசனம் செய்ய முடியும். எனவே முறை வைக்காமல் 18,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.கவிற்கு எந்த காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. யார்- யாருடன் சேர்ந்தாலும் அ.தி.மு.கவிற்கு பாதிப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக்கு, "ஏன் இந்த சந்தேகம். வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அ.தி.மு.க வலிமையான கூட்டணியில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மிகப்வெற்றியை பெறுவோம்" என்றார்.