தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
கோவையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 'முருகன் இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி... இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் " .
தமிழ் கடவுள் முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காகவும் தினை மாவு சாப்பிட்டார் என்றும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே மேடையில், 'நான் இதை ஜோவியலாகத்தான் சொன்னேன்' என்று விளக்கம் கொடுத்தார்.
ஆனால், அமைச்சரின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், 'கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
'முருகன் இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி... இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் " என்று கூறி விட்டு "ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்" என்றும் கூறியுள்ளார்.
உவமான, உவமேயங்களுக்கு ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் கடந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா?
சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர்களையே குறிப்பிட்டு இருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே?' என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோல ஆன்மீக அன்பர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.