தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

விண்கலன்களுக்கு விஞ்ஞான பூர்வமான பெயர் சூட்ட வேண்டும்- வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதற்காக அதுமுக குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது

விண்கலன்களுக்கு அறிவியல், விஞ்ஞான பூர்வமான பெயர் சூட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மத்திய, மாவட்ட நிர்வாகிகள், கிளைகள் ஆய்வு மற்றும் இணைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு நிர்வாகிகள் ஆய்வு மற்றும் சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலை கண்டிப்பதாகவும், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை.

இந்தியாவில் எந்த கட்சிகள் ஆண்டாலும், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் துரோக ஆட்சிகளாகத்தான் இருந்து வருகிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. உச்சநீதிமன்றம் 12 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறது. அந்தத் தண்ணீர் மழையின் காரணமாக உபரிநீராக திறந்து விடப்பட்டதா,அல்லது உண்மையிலேயே குறுவை, சம்பா சாகுபடி களுக்காக திறந்து விடப்பட்ட நீரா என்பதை தமிழ்நாடு அரசு தான் விளக்க வேண்டும்.

காவிரியை பொருத்தவரை தமிழ்நாட்டில் இருக்கிற தேசிய கட்சிகள்,பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்பட தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கிறார்கள்.அது பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது.

நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, காவிரி நதிநீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பின்படி, குறுவை சம்பா சாகுபடிகளுக்கு திறக்க வேண்டிய தண்ணீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டிக்கும் வகையிலும், நமது ஒற்றுமையை காட்டுகின்ற வகையிலும், தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சி தலைவர்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற தலைவர்களையும் அழைத்து பேசி நமது வலிமையை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் தெரிவித்தார்.

மேலும் நிலவில் தடம் பதித்த லேண்டர் பகுதியை இந்து மதம் சார்ந்த ’சிவசக்தி’ என்று பெயர் சூட்டுவது, இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு. அதில் அறிவியல் பூர்வமான விண்கலன்களுக்கு விஞ்ஞான பூர்வமான பெயர் சூட்ட வேண்டுமே தவிர, தன் கட்சி எடுத்திருக்கிற கொள்கை சார்ந்த பெயர் சூட்டலை பிரதமர் தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com