உத்தவ் தாக்கரேயிடம் 15 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் செல்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மராட்டிய அரசியலில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதைனைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டு பா.ஜ.க முதல்வராகவும் இருக்க இரு கட்சிகளுடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனால், பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். ஆனால், யாரும் எதிர்பாரத நிலையில், பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் பா.ஜ.க அரசு ஒரு சில நாட்களில் கவிழ்ந்தது.
பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி அமைந்தது. இதில், உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த அரசு சுமார் 3 ஆண்டுகள் நீடித்தது.
இந்த நிலையில், இந்த அரசை சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் பா.ஜ.க கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க உடைத்தது.
அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேர் அமைச்சராக பதவியேற்றனர். மேலும், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது அஜித் பவார் தலைமையில் வந்த எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், ஷிண்டே தரப்பு எம்.எல்.எ. -ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஷிண்டே தரப்பு சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் மீண்டும் உத்தவ் தாக்கரேயிடம் செல்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மராட்டிய அரசியலில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.