"இன்னுயிரைத் தியாகம் செய்த பலிதானிகள்" - அண்ணாமலை உருக்கம்

தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பலிதானிகள் என உருக்கம்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குண்டு வைத்து தாக்கப்பட்ட தினத்தையொட்டி, அதில் உயிரிழந்த 11 பேர், தாய் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த நாள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம், பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தாக்கப்பட்டதில், தங்கள் இன்னுயிர் நீத்த 11 தியாகிகளுக்கு இன்று 30 -ம் ஆண்டு நினைவு நாள்.

கடந்த 1993 -ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 பேர் பலியானதும், 7 பேர் பலத்த காயமுற்றதும் காலத்தால் அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்தியிருக்கிறது.

போலிப் பிரச்சாரங்களைக் கண்டு பின்வாங்காமல், பல துன்பங்களைத் தாண்டி, பேரிடர் காலங்களில், மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பலிதானிகள் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சார்பாக புகழஞ்சலிகள். தேச ஒருமைப்பாடுக்கான ஒவ்வொருவரின் தியாகத்தையும் மதித்து வணங்குவோம். தேசியத்தை போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com