பா.ஜ.க தேசிய மகளிர் அணி செயலாளர் நீக்கம் - வானதி சீனிவாசன் அதிரடி நடவடிக்கை - என்ன காரணம்?

காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு தெரிவித்துள்ளார் என புகார்
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கேரளாவில், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், பா.ஜ.க தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து பத்மஜா மேனன் என்பவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

பா.ஜ.க மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியைச் சேர்ந்த பத்மஜா மேனன் செயல்பட்டு வந்தார். மேலும், இவர் கொச்சி மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில், கல்வி நிலை குழு தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. மாநில தலைமை, விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனால், பா.ஜ.க மகளிரணி தேசிய செயலாளர் கொச்சி பத்மஜா மேனன் மீது கட்சி தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், பத்மஜா மேனன் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மகளிர் அணி தேசிய செயலாளர் பதவியில் இருந்து பத்மஜா நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பிறப்பித்துள்ளார். பத்மஜா நீக்கத்தை கேரள மாநில பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com