“நிர்மலா சீதாராமன் கதை விடுகிறார்”- மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடல்

ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஹிந்தி, சமஸ்கிருதத்தை படிக்கவில்லையென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிந்த காலத்தை பற்றி கதை விடுகிறார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிலப்பதிகாரம் நூலைப் படிக்க அவருக்கு இன்னும் நேரம் கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது.

தி.மு.க அரசின் திட்டங்களால் பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறியுள்ளது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம்.ராமநாதசாமி கோவிலில் தங்கத் தேரை ஓட வைத்தோம். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். 5,000 சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது திமுக. தமிழ்நாட்டை தி.மு.க தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து செங்கல் மட்டுமே உள்ளது. 9 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஜிஎஸ்டி வரிவசூல் ஈட்டும் மத்திய அரசு தமிழகத்திற்கான திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறது. தமிழ்நாட்டிற்கான உரிமைகளை கேட்டால் பிரிவினை பேசுவதாக சொல்கிறார்கள்.

ஹிந்தி, சமஸ்கிருதத்தை படிக்கவில்லையென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிந்த காலத்தை பற்றி கதை விடுகிறார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிலப்பதிகாரம் நூலைப் படிக்க இன்னும் நேரம் கிடைக்கும்.டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டை எரித்தவர்கள் யார் என்பதை பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காக நிர்மலா சீதாராமனுக்கு ஏன் கண்ணீர் வரவில்லை. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

பாஜக அதிகம் நம்பிக்கொண்டிருக்கும் வடமாநிலங்களையும் தற்போது இழக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.மக்கள் நலனில் அக்கறை இல்லாத பிரதமர் தி.மு.க-வை விமர்சிக்கிறார் எனில் தி.மு.க சரியாக இருக்கிறது என பொருள்.மாற்றுக்கட்சி தலைவர்களை கடன்வாங்கி திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி. சொந்தக்கட்சியில் சொல்வதற்கும் பாஜகவுக்கு தலைவர்கள் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தி.மு.க குறித்து அவதூறுதான் பரப்புவார்கள், அவர்களுக்கென்று சொல்ல எந்த வரலாறும் கிடையாது. தி.மு.க மாநில கட்சிதான், நாட்டின் அனைத்து மாநிலங்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுக. தங்கள் கொள்கைகளை திமுக உறுப்பினர்கள் பேசுகிறார்களே என்பதுதான் பாஜகவின் கோவம்.

தி.மு.க பிரிவினையை தூண்டுவதாக பாஜக திசை திருப்புகிறது.பொய் சொல்கிறது. இந்தியாவில் இருக்கும் Anti indians ஆக பாஜகவினர் இருக்கிறார்கள். தங்களை விமர்சிப்பவர்களை Anti indians என பாஜகவினர் விமர்சிப்பது வழக்கம்.

எம்.ஜி.ஆர் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என பிரதமர் மோடி கேட்கிறார்.அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிட உடைமையடா என பாடியவர் எம்.ஜி.ஆர்.மத்தியில் ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்டது திமுகதான்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று சொன்னாரே, செய்தாரா பிரதமர் மோடி என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டிற்கு தந்த வாக்குறுதிகளை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014ல் ராமநாதபுரத்தில் பேசுபோது சொல்லிய வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. மேலும் இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக அரசு சீரழித்துவிட்டது.ரூ.15 லட்சம் போடவில்லை. 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

2014க்கு பிறகு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். மேலும் 2024 தேர்தலுக்கான நாடகம் தான் தற்போதைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான நடவடிக்கை.இவ்வாறு அவர் பேசினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com