உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அயோத்தி ராமர் கோயில் 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்கள் அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்பட 6 மண்டபங்கள் அமைப்பட உள்ளது. 161 அடி உயரத்தில் மூலவர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 2024 ஜனவரி மாதம் 14ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு முறைப்படி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் முக்கியதஸ்தர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோயில் கட்டுமான பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.