ரூ.2000 நோட்டு விவகாரம் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே அறிவிக்க வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னாசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு, 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை பாதித்துள்ளது' என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு புகாருக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு இது. அமைச்சரின் பேச்சு பொறுப்பற்ற பேச்சு அல்லது தெரியாது பேசுகிற பேச்சாக எடுத்துக் கொள்ளவேண்டும்' என தெரிவித்துள்ளார்.