திருநெல்வேலி மாநகரத்தில் பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்த அருள்மிகு பாக்கிய விநாயகர் மற்றும் அருள்மிகு கல்யாண விநாயகர் கோவில் ஆகிய இரண்டு விநாயகர் கோவில்களும் அப்போது அகற்றப்பட்டது.
அப்போது, உள்ள அதிகாரிகள் புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்தவுடன் அதே இடத்தில் விநாயகர் கோவில் கட்டப்பட்டு, சிலை வைக்கப்படும் என, உறுதி அளித்தனர்.
தற்போது பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் 2 விநாயகர் சிலைகளும் வைக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்து முன்னணியினர் இன்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் விநாயகர் வேடம் அணிந்து மனு அளித்தனர்.
அதில், ‘உடனே விநாயகர் சிலையை அங்கு வைக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என கூறப்பட்டுள்ளது.