'நீதிமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி ஜனநாயகம் குறித்தும், அரசியலமைப்பு குறித்து குறித்தும் பேசுவது கேலிக்கூத்தானது' என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
'ஜனாதிபதி பாராளுமன்றத்தை திறந்து வைக்காததும், விழாவிற்கு அழைக்காததும் நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயலாகும்.
பாராளுமன்றம் என்பது ஈகோ என்ற செங்கற்களால் ஆனது அல்ல, மாறாக அரசியலமைப்பு விழுமியங்களால் ஆனது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில்,
'முறைகேடு வழக்கில் வெளியான தீர்ப்பையடுத்து, ஈகோ எனும் செங்கற்களால் அவசர கால நிலையை இந்தியாவில் அமல்படுத்தி ஜனநாயகத்தை வீழ்த்தியவரின் பேரன்,
ஷாபானு வழக்கின் தீர்ப்பையடுத்து சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அரசியலமைப்பு விழுமியங்களை தவிடு பொடியாக்கியவரின் மகன்,
ஒரு ஜாதி குறித்து இழிவாக பேசி தண்டனை வழங்கிய நீதிமன்றத்தை அவமதித்து, தன்னை ஒரு தியாகியாக சித்தரித்து கொண்ட நபர்,
ஜனநாயகம் குறித்தும், அரசியலமைப்பு விழுமியங்கள் குறித்தும் பேசுவது கேலிக்கூத்து' என தெரிவித்துள்ளார்.