நாடாளுமன்றம் அரசியலமைப்பு மதிப்புகளின் மூலம் கட்டப்பட்டது, 'ஈகோ செங்கற்களால்' அல்ல என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘’புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவை திறந்து வைக்கவோ, விழாவிற்கு அவரை அழைக்கவோ இல்லை என்பது நாட்டின் மிக உயரிய அரசியல் சாசன பதவியை அவமதிக்கும் செயல். நாடாளுமன்றம் ’ஈகோவின் செங்கற்களால்’கட்டப்படவில்லை என்றும் அரசியலமைப்பு விழுமியங்களால் கட்டப்பட்டது’’ என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மதிப்பில்லை எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்தனர். இது பெரும் விவாதமாகி இருக்கிறது. .
இந்நிலையில் இது குறித்து இந்தியில் ட்வீட் செய்த ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்காததும், விழாவுக்கு அவரை அழைக்காததும் நாட்டின் மிக உயரிய அரசியல் சாசனப் பதவியை அவமதிக்கும் செயலாகும். நாடாளுமன்றம் ஈகோ செங்கற்களால் கட்டப்படவில்லை, மாறாக அரசியலமைப்பு விழுமியங்களால் கட்டப்பட்டது" என்று காந்தி கூறினார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அழைப்பை ஏற்று மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் இந்தியாவின் மாநிலங்களின் தலைவர் மட்டுமல்ல. அவரை நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து, முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்தக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல’’என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.