அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் ஒற்றிணைக்க ஓ.பி.எஸ் முயற்சி செய்து வருகிறார். அதற்காக நிச்சயம் சசிகலாவை சந்திப்பார் என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்திடம், ’’அ.தி.மு.க போன்ற கட்சிகள் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளாரே?’’என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’நாங்கள் இன்று வரை பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் தான் இருக்கிறோம். அதனை விட்டு வெளியே வரச் சொல்வது திருமாவளவனின் கருத்து.
சுயலாபத்திற்காக அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி அழிக்கிறார். அதிமுகவை ஓநாய்கள் காவல் காக்கின்றன.
அரசின் கவனக்குறைவுதான் கள்ளச்சாராய இறப்பு. கள்ளச் சாராயத்தை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கேட்டுக் கொண்டார்.