நெய்வேலி கலவரம்: காவல்துறைக்கு கண்டனம் - பா.ம.கவுக்கு ஆதரவு - வேல்முருகன் தடாலடி

தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக
வேல்முருகன்
வேல்முருகன்

நெய்வேலி என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்கவேண்டும் என போராட்டம் நடத்திய பா.ம.கவினர் மீது, தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய 12,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனே தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், என்.எல்.சி. நிறுவனம் உடனே வெளியேற வேண்டும் என்றும், இன்று நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. போலீசார் மீது பா.ம.கவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் மண்டை உடைந்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விலை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் N.L.C நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அப்போது, தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com