நெல்லை: 'கள்ளச் சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை' -அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு தமிழர்களை வேலைக்கு அனுப்ப 103 பேர் பதிவு செய்யபட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களை அழைத்து கூட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று பாதிப்படையும் நபர்கள் அனைவரும் போலியான நபர்கள் மூலமே வேலைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 293 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 3 ஆயிரத்து 280 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடுகளுக்கு தமிழர்களை வேலைக்கு அனுப்ப 103 பேர் பதிவு செய்யபட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களை அழைத்து கூட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று பாதிப்படையும் நபர்கள் அனைவரும் போலியான நபர்கள் மூலமே வேலைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட நான்கு பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் நாட்டில் படித்து மீண்டும் தமிழகத்தில் அவர்கள் பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள பாடத்திட்டத்திற்கும் இங்குள்ள பாடத்திட்டத்திற்கு வித்தியாசம் இருப்பது, நீட் தேர்வு இருப்பதால் மருத்துவ படிப்பை இங்கு தொடர வாய்ப்பில்லை எனவே மாணவர்கள் படித்த வெளிநாடுகளிலேயே தொடருவதற்கு விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தூதரகங்கள் மூலம் செய்துகொடுப்பதற்கு அரசு தயராக உள்ளது. மத்திய அரசிடம் உக்கிரைனில் படித்த தமிழக மாணவர்கள் உள் நாட்டில் மருத்துவபடிப்பை தொடர தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. நீட்தேர்வு இருப்பதால் அதனை செயல்படுத்தமுடியவில்லை. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான கேள்விக்கு, எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். சமூக விரோதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் அவர்களை நோக்கி பார்க்க வேண்டும்.

தூத்துக்குடியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காலத்தில் அப்போதைய முதலமைச்சர் அவர்களை சென்று கூட பார்க்கவில்லை. ஆனால் தற்போது முதல்வர் அனைவரையும் நேரில் சென்று பார்த்து உள்ளார். குற்றம் புரிந்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் பார்க்கபடாது என முதல்வர் கூறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப், ரூபி மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com