நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான் குளத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் நடைபெற்ற வெடி விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பலியானார்கள். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டதில் உள்ள 52 கல் குவாரிகளும் இழுத்து மூடப்பட்டன. அங்கு விதி மீறல் தொடர்பாய் ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டது. கல்குவாரிகளை ஆய்வு செய்த அக்குழு சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமவளங்களை கல்குவாரி அதிபர்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்தது.
எனவே அவர்கள் இந்த அபராதத்தை கட்டி விட்டு அரசு ஒப்புதல் பெற்று குவாரிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கல்குவாரி உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் தடை வாங்கி குவாரிகளை திறந்தனர். அதற்கு எல்லா ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் உடந்தை. இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரத்தில் மட்டும் 13 புதிய கல்குவாரிகளுக்கு கலெக்டர் கார்த்திகேயன் அனுமதி அளித்திருக்கிறார். இதற்கு 10 கிராம மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் மீனவ சங்க பிரதிநிதி ராயன் கூறுகையில், ’’ராதாபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன், தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்ராஜ் சேவியர் கலந்து கொண்டு மீனவர்கள் குறைகளைக் கேட்டனர். பெருமணல், கூத்தன்குழி, உவரி, இடிந்தகரை,கூடுதாழை உள்ளிட்ட 10 கடற்கரை கிராம மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், கடல் அரிப்பு பகுதிகளில் தூண்டில் வளைவு, கூடுதலாய் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டு என்று கேட்டுக் கொண்டனர்.
தவிர, தற்போது ராதாபுரம் யூனிய க்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 13 புதிய கல்குவாரிகள் அமைக்க அ மதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கல்குவாரிகளில் அதிக சக்தி உள்ள வெடிகளை வெடிப்பதால் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலம் அதிர்ந்து வீடுகளில் விரிசல் விழுகிறது. தாங்க முடியாத பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் குண்டும் குழியுமாகி மக்கள் டூ-வீலர்களில் செல்ல முடியவில்லை. இதே நிலை நீடித்தால் இப்பகுதி பாலைவனமாகி விடும். எனவே குவாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லைசென்சை உடனடியாக கேன்சல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.