நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சீமான் பேசிய அவர், "தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து NLC நிலம் கையகப்படுத்துகிறது. விவசாயிகளை இந்த மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள், NLC அமைக்கிறார்கள். இது நல்லதா விவசாயங்களை அழிப்பது ஏற்பது அல்ல
அண்ணாமலை ஆளுநரைச் சந்திக்கிறார். அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுகிறார். திமுகவினர் ஊழல் பட்டியல் வெளியிடும் அண்ணாமலை அ.தி.மு.கவினர் செய்த ஊழல் பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை அதிமுகவினர் புனிதர்களா? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை, அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும் அங்கே மின் இணைப்பைத் துண்டிக்கச் சொன்னது யார் ? மணிப்பூர் கலவரம் பற்றி திமுகவினர் பேசுவது புனிதமா? குஜராத் கலவரத்தைப் பற்றி கருணாநிதி நியாயப் படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர் இப்போது எதிராகப் பேசுகின்றனர்
தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்குக் கருணாநிதி பெயர் வைக்கின்றார் ஸ்டாலின். டாஸ்மாக் கடைக்கு ஏன் கருணாநிதி டாஸ்மாக் கடை எனப் பெயர் வைக்கவில்லை.
தமிழக மீன்வர்கள் கைது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளாரே என்ற கேள்விக்கு.. 'தமிழக முதல்வர் ஒரு போஸ்ட்மேன் தான் என்றார். அதிமுகவும் - பாஜகவும் கூட்டு ஒட்டு அரசியலுக்காகத் தமிழகத்தில் பல திட்டங்களைத் தருவதாகத் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் முன்னால் அதிகாரி IPS பயிற்சியின் போது நடைபயற்சி போயிருப்பார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம் உடல் FIT ஆக இல்லை போல, தற்போது உடலை FIT ஆக நினைத்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராது. தண்ணீரில் தான் தாமரை மலரும் தமிழகத்தில் தாமரை மலராது என்றார்
தேர்தலுக்காக 70 ஆயிரம் பணி நியமன ஆணை. இன்னும் என்ன வாக்குறுதி எல்லாம் மோடி தருவார் பாருங்கள் என்று சொல்லி வாக்கைப் பெற்று தமிழகத்தைத் துண்டாட பார்க்கின்றனர். பிரதமர் மோடி சந்திரயான் பற்றி மோடி பாராட்டிப் பேசிவருகின்றார். அங்கே குடியோக நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா?, முஸ்லிம்களையா? கிறிஸ்தவர்களையா என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்.
பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. தமிழகத்திற்கு என்ன செய்தது. காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பொது என்ன செய்தது. தமிழகத்தையும், தமிழக மக்களையும் ஏமாற்றி தனியார்த் துறைக்குத் தாரை வார்த்து வஞ்சிக்க உள்ளது.
அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்' என்றார்.