"மோடியின் முகவரி திருப்பரங்குன்றம்" - அண்ணாமலை அசத்தல் பேச்சு

தமிழகத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சௌராஷ்டிரா மக்களின் பங்களிப்பை உலகறியச் செய்துள்ளார் பிரதமர் மோடி.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

இன்றைய என் மண், என் மக்கள் பயணம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது, பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்தப் பகுதி நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. எனவே அருகில் விருதுநகரில் ரூ.500 கோடி மதிப்பில் மத்திய அரசு ஜவுளிப் பூங்கா அமைக்கவுள்ளது.

பட்டு நெசவுத் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக சில்க் சமக்ரா திட்டத்தின் கீழ் ரூ.115 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவுத் தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ள சௌராஷ்டிரா மக்களின் பங்களிப்பை உலகறியச் செய்துள்ளார் நமது பிரதமர் மோடி.

தேர்தல் நேரத்தில் மட்டும் பேசும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெசவாளர்களின் வலி எப்படித் தெரியும்? நூல் கொள்முதல் நிலையம், நெசவாளர்களுக்கென தனி வங்கி என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றி விட்டனர். மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்திவிட்டனர்.

தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி 395 கோடி மூலம் பயன்பெற்ற திருப்பரங்குன்றம் இருளாயி, தமிழகத்தில் 1.4 கோடி பிரதமரின் இலவச வங்கிக்கணக்குகளில் ஒன்று பஞ்சு அவர்களுடையது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பலன் பெற்ற 15 லட்சம் பேரில் லட்சுமி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 1694.37 கோடி ரூபாய் நிதியில் பலன் பெற்ற முத்தம்மாள், உஜ்வாலா திட்டம் ஒன்று மற்றும் இரண்டின் கீழ் 37 லட்ச பயனாளிகளில் ஒருவரான ஆதிமீனா - இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.

ஊழல் கட்சியான தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியை இனியும் மக்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பது உறுதி.

அதில் தமிழகத்தின் பெரும்பங்கும் நிச்சயமாக இருக்கும் என்பது இங்கு கூடியிருக்கும் மக்களின் பேராதரவில் தெரிகிறது என உணர்ச்சிப் பெருக்காக பேசி, அனைவரது கைதட்டல்களையும் அள்ளினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com