அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு - தீர்ப்பு எப்போது?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வழக்கு விசாரணை வருகிற 23 -ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீன் மற்றும் கால்நடை துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

ஏற்கெனவே, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது.

இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முக்கிய ஆவணங்கள் இருப்பதால் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை ஏற்கெனவே தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி விடுப்பில் உள்ளதால் பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் வழக்கை விசாரித்தார். மேலும் விசாரணையை வருகிற 23 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- அண்ணாதுரை

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com