மேகாலயா மாநிலத்தில் சோகியாங் தொகுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க நோட்டாவை-விட மிகக் குறைவாக, அதாவது வெறும் 40 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது பா.ஜ.க நிர்வாகிகளை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேகாலயா மாநிலம் சோகியாங் தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. இதில், பா.ஜ.க வெறும் 40 ஓட்டுக்களை மட்டுமே வாங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 60 தொகுதிகளுக்கு நடைபெற்ற மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மேலும், ஆஃப் தி பீப்பிள் பார்ட்டி 4 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பா.ஜ.க 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கான்ராட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில், சோகியாங் தொகுதியில் லிங்டோ என்பவர் இறந்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக கட்சி 16,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் 13,257 வாக்குகள் பெற்றார்.
அதேபோல, தேர்தலில் தனியாக போட்டியிட்ட பா.ஜ.க வெறும் 40 ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 272 வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால், பா.ஜ.க தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவாகரம் குறித்து விசாரணை நடத்த தலைமை உத்தரவிட்டுள்ளது.