மதுரை: ’மீனாட்சி அம்மன் தரிசனத்தால் புத்துணர்ச்சி’: அமைச்சர் ரோஜா பக்தி பரவசம்

மதுரை: ’மீனாட்சி அம்மன் தரிசனத்தால் புத்துணர்ச்சி’: அமைச்சர் ரோஜா பக்தி பரவசம்
Jayakumar a

’’மீனாட்சியம்மன் கோவிலில் அமைச்சராக சாமி தரிசனம் செய்துள்ளேன். இன்னும் புத்துணர்ச்சியுடன் மக்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்கிறேன்’’ என நடிகையும், தெலங்கானா அமைச்சருமான நடிகை ரோஜா தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை, மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மன் சுவாமி சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கோவிலுக்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா,’’மதுரை மீனாட்சி அம்மன் ஆசிர்வாதத்துடன் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளேன். 2013-ம் ஆண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றேன். அதன்பிறகு அமைச்சரானபின் தற்போது வந்துள்ளேன். மீனாட்சி அம்மனிடம் பூஜை செய்துவிட்டு ஆசீர்வாதம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் எனர்ஜியுடன் புது சக்தியுடன் ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com