சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல் - பிரதமர் மோடி முதலிடம்

செக் குடியரசு தலைவர் பீட்ர் பாவெல் ஆகியோருக்கு குறைந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது..

அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று 22 உலகத் தலைவர்களை வைத்து ஆய்வு நடத்தி உள்ளது. இந்த ஆய்வில், 76 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் அதிபர் அலைன் பெர்செட் இரண்டாவது இடத்திலும், 40 சதவீதம் பேரின் ஆதரவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7வது இடத்திலும் உள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10வது இடத்தில் உள்ளார். அதேப்போல் தென்கொரிய அதிபர் யூன் சியோக் யூல் மற்றும் செக் குடியரசு தலைவர் பீட்ர் பாவெல் ஆகியோருக்கு குறைந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com