’’ஓசூர் மாநகர மேயர், பா.ஜ.க நகர செயலாளராக இருந்தவர்’’ என உண்மைக்கு மாறாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ராம்நகர் அண்ணாசிலை முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உறையாற்றினார். அப்போது, ‘’ஓசூர் தி.மு.க எம்.எல்.ஏ, 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனிமவளத்தை கொள்ளையடித்ததாக செய்திகள் வந்துள்ளது. 100 கோடி, 200 கோடி கொள்ளை என்பப்து மாறி 1000 கோடி ரூபாய் வரை கொள்ளை என்றால் அநேகமான இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஐடியா கொடுத்திருக்கலாம். அடுத்த செந்தில் பாலாஜியாக கூட இவர் இருக்கலாம்.
ஓசூர் பகுதியில் தி.மு.க சார்பில் ஒரு கன்னட எம்.எல்.ஏ, ஒரு தெலுங்கு எம்.எல்.ஏ வென்றுள்ளனர். ஆனால் தற்போதைய எம்.எல்.ஏ, பிரகாஷ் ஒரு கன்னடர். தெலுங்கு மொழிக்காரர் யாரும் தி.மு.க சார்பில் போட்டியிடவில்லை. மலையாளம் மொழி பேசக்கூடியவர் தான் ஓசூர் மேயர். அவர் பா.ஜ.க நகர செயலாளராக இருந்தார்’’ என்று அவர் பேசினார்.
ஓசூர் மாநகர மேயர், பா.ஜ.க நகர செயலாளராக இருக்கவில்லை. இவ்வாறு அண்ணாமலை உண்மைக்கு மாறாக பேசியதால் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் சற்று நேரம் அமைதி நிலவியது.
-பொய்கை.கோ.கிருஷ்ணா