கர்நாடக: முதலமைச்சர் யார்? - முடிவுக்கு வந்த இழுபறி - முழு விவரம்

முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சித்தராமையா - டி.கே.சிவக்குமார்
சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

கர்நாடகா மாநிலத்தில், முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில், முதலமைச்சர் யார்? என்று சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், முதலமைச்சரவை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள காண்டீரவா மைதானத்தில் நாளை மறுநாள், அதாவது 20-ம் தேதி அன்று, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

டி.கே.சிவக்குமாருக்கு முக்கிய இலாகாக்களான மின்சாரம், நீர்வளத் துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட உள்ளது. அதேபோல, சிவக்குமாருக்கு நெருக்கமான சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com