கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில், பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து, நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. அதுபோல, காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், அதாவது மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், 2-வது பெரிய கட்சியாக பா.ஜ.க வரும் என்றும் தெரிவித்தன.
ஆனால், இந்த இரண்டு கட்சியுமே அதிப்பெரும்பான்மை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே கர்நாடகா அரசியலில் பரபரப்பை எட்டியுள்ளது. அதாவது பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என காங்கிரஸ், பா.ஜ.க-வினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.