கர்நாடகா: மரக்கிளையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி பறிமுதல் - சிக்கிய காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர்

கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது
பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்

கர்நாடகா மாநிலத்தில், காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் கிளையில் ஒரு கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ.க, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பா.ஜ.க வேட்பாளர்களுக்காக, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி அனல்கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல, காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மங்களூரு நகர் புத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, அசோக் குமார் போட்டியிடுகிறார். அவரது சகோதரர் சுப்பிரமணிய ராய் என்பவர், தேர்தல் செலவுகளுக்காக பணம் வைத்திருந்தார். அவர், தனது வீட்டின் மரக்கிளையில் 1 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமானவரித் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மைசூர் நகரில் உள்ள அவரது வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் கிளையில் ஒரு அட்டைப்பெட்டியில், ஒரு கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com