கர்நாடக தேர்தல்: தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி ரவி தோல்வியை தழுவியது எப்படி?

சிக்மகளூரில் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சி.டி ரவி 5-வது முறையாக போட்டியிட்டபோது தோல்வி அடைந்துள்ளார்
சி.டி ரவி
சி.டி ரவி

கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சி.டி.ரவி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார்.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், அதாவது, மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், 2-வது பெரிய கட்சியாக பா.ஜ.க வரும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன.

அதனை மெய்பிக்கும் வகையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 138 தொகுதிகளிலும், பா.ஜ.க 62 தொகுதிகளும், ம.ஜ.த 20 தெகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளரும், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளருமான சி.டி. ரவி, சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.

சிக்மகளூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் 5-வது முறையாக போட்டியிட்டபோது, தோல்வியை தழுவியுள்ளார். சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.டி.தம்மையாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் திம்மாஷெட்டியும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் சுமார் 7,000 வாக்குள் கூடுதலாகப் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையா வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com