224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இருப்பினும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி இருந்தது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே13-ம் தேதி) எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி, 129 தொகுதிகளிலும், பா.ஜ.க 66 தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக மாநில முதலமைச்சருமான பசவராஜ் பொம்மை ஷிங்கான் தொகுதியில் போட்டியிட்டார். அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட அமுதா ஐ.ஏ.எஸ்ஸின் கணவர் ஷம்பு கல்லோலிகர் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் ஐ.ஏ.எஸ் ஷம்பு கல்லோலிகருக்கு 32 சதவீதம் வாக்குகள் வாங்கி உள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் வேட்பாளருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் சீட்டு தர மறுத்த நிலையில், ரைபேக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர், இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், பா.ஜ.க முதலிடத்திலும், காங்கிரஸ் மூன்றாம் இடம் பிடித்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இவர் கர்நாடக தேர்தலுக்காக தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.