கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக பா.ஜ.க. 30 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மே 13 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் உடனுக்கு உடன் அறிவிக்கப்பட்டது.
இதில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை அதாவது 135 கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜ.க 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், பா.ஜ.க-வைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்30 தொகுதியில் பா.ஜ.க. டெபாசிட் இழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பா.ஜ.க. தலைவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், 10 தொகுதிகளில் 2 முதல் 5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.