"கனிமொழிதான் கட்சியின் தலைவர்" - அண்ணாமலை பேச்சு

இந்த தேர்தல் பா.ஜ.கவுக்கு வாழ்வா? சாவா? சிலர் பேசுகின்றனர். அதுபோன்ற சூழ்நிலை எங்களுக்கு இல்லை.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

தி.மு.கவில் முறைப்படி நடந்தால் கனிமொழிதான் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பா.ஜ.கவைப் பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா? சாவா? தேர்தல் எனவே, அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள்.

கடந்த காலங்களில் பல தடைகளை உடைத்துதான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறையும் நாம் அப்படி வெற்றி பெற திமுகவினர் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இந்த தேர்தல் பா.ஜ.கவுக்கு வாழ்வா? சாவா? தேர்தல் சிலர் பேசுகின்றனர். அதுபோன்ற சூழ்நிலை எங்களுக்கு இல்லை.

முதல்வர் ஸ்டாலின் வரும் தேர்தலில் தோற்றார் என்றால் தி.மு.க தலைமையில் மாற்றம் வரும். கட்சி தேர்தல் முறைப்படி நடந்தால் தி.மு.கவின் தலைவராக கனிமொழிதான் வெற்றி பெறுவார். இதை நான் சொல்லவில்லை, பாதயாத்திரையின் போது நான் சந்திக்கும் தி.மு.கவினர் கூட கனிமொழிதான் தலைவராக வர வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com