காஞ்சிபுரத்தில் பிரபல தனியார் சலூன் கடை திறப்பு விழாவிற்கு சென்ற காஞ்சிபுரம் எம்.எல்.ஏ நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் பிரபல பாடல் ஒன்றுக்கு ரஜினி ஸ்டைலிலேயே அப்பாட்டுக்கு குத்தாட்டம் ஆடி அசத்தினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே நெல்லுக்கார வீதியில் புதிதாக பிரபல தனியார் சலூன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு தனியார் சலூன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிலையில் பிரபல தனியார் சலூன் கடை சார்பில் திறப்பு விழாவில் பாட்டு கச்சேரியில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில், பிரபல திரரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்து, ஹிட்டான பேட்ட படத்தின் ’உல்லாலா உல்லாலா’எனும் பாடல் பாடிய போது அங்கிருந்தவர்களின் கோரிக்கையை ஏற்று, அப்பாடலுக்கு திடீரென காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், நடிகர் ரஜினியின் ஸ்டைலியே அப்பாடாலுக்கு மாஸ் ஆக நடனமாடி குத்தாட்டம் போட்டு அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தி குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஓர் சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருந்தாலும், அவர் நடனமாடுவதிலும் வல்லமை படைத்தவர் என்பதால் கடந்தக் கால தேர்தல் பிரச்சாரங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் கூட இதேபோல் நடனமாடி அசத்தி அனைவரையும் மகிழ்வித்தவர்.