'களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்' என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரபல ஆங்கில நாளிதழுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இதில், 'திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது. இது போன்ற காலாவதியான கொள்கைகளை வைத்துக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடைபெறுகிறது' என விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநருக்கு ட்வீட் மூலம் பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், ”திராவிட மாடல் செத்துப் போன தத்துவம். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது. பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.