திருவிழாக்களில் அசம்பாவிதம்: 'மக்களுக்கு பாதுகாப்பு இல்லை' - ஆதாரங்களை அடுக்கும் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, பொதுமக்கள் கூடும் திருவிழா சமயங்களில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதே போல ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது' என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, பொதுமக்கள் கூடும் திருவிழா சமயங்களில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்வில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கியது.

அதேபோல, தஞ்சை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் பலரது மனதையும் காயப்படுத்தியது.

சென்னை நங்கநல்லூர், அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக இந்த ஆட்சியில் நடைபெறும் துயரச் சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே, இனியாவது தி.மு.க. அரசு விழித்துகொண்டு, இதுபோன்ற லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களின்போது, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com