கரூரில் கொங்கு மெஸ் மணி இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 வது கட்டமாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மே 26 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 17 மணி நேர சோதனைக்கு பின், அவரை கைது செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஓமந்துரார அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். பின் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு பை பாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது.