அரசியல்
’டி.ஆர்.பி ராஜா எனும் நான்...’: அமைச்சராக பதவியேற்றவுடன் கொடுக்கப்பட்ட கார்
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிந்தனைக்கு ஏற்ப எனது செயல்பாடு இருக்கும்" என்றார்.
அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு அரசு சார்பில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.