வெளிநாட்டில் பிரதமர் மோடிக்கு உயரும் மரியாதை: ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட உள்ள லிட்டில் இந்தியா

சிட்னியில் நடக்கும் நிகழ்விலும் ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பங்கேற்கிறார்.
வெளிநாட்டில் பிரதமர் மோடிக்கு உயரும் மரியாதை: ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட உள்ள லிட்டில் இந்தியா

பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று முன் தினம் ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் காந்தி சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து, அங்கு நடக்கும் 49வது ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜி 7-ல் உறுப்பு நாடுகளாக கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. விருந்தினர் நாடாக இந்தியாவுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இன்றும் ஜி 7 மாநாட்டின் அமர்வுகள் துவங்குகின்றன. பருவநிலை மாற்றம் முதல் சுற்றுச்சூழல் வரை அனைத்து தலைப்புகளிலும் கலந்துரையாடல் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்று நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுவார் என்று கூறப்படுகிறது.

ஜப்பானில் நடக்கும் ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் 22ஆம் தேதி பப்புவா நியூ கினியா நாட்டுக்கு மோடி செல்கிறார். தற்போதைய வெளிநாட்டு பயணத்தில் பிரதமர் மோடி பல அரிய மரியாதைகளை பெற்றுக் கொண்டார்.

பப்புவா நியூ கினியாவில் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க அந்நாட்டு பிரதமர் வருவார். பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வரும் எந்தத் தலைவருக்கும் ஜப்பான் நாட்டு சம்பிரதாயப்படி வரவேற்பு கொடுப்பதில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பூரண சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

14 பசிபிக் தீவு நாடுகள் உள்ளடக்கிய உச்சி மாநாட்டில் 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள். பொதுவாக, அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதில் சிக்கல்கள் காரணமாக அரிதாகவே இந்த மாநாட்டில் அந்த நாடுகள் கலந்து கொள்கின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு மீண்டும் அழைப்புகள் வருகின்றன. சிட்னியில் நடக்கும் நிகழ்விலும் ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பங்கேற்கிறார்.

பரமட்டாவில் உள்ள ஹாரிஸ் பார்க் பகுதி ‘லிட்டில் இந்தியா’என்றும் அழைக்கப்படும். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்வின் போது இதுவும் அறிவிக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் அல்பானீஸ் ஆகியோர் தங்கள் நாட்டில் வித்தியாசமான சவால் குறித்து பிரதமர் மோடியிடம் வந்து, ’’சிட்னியில் வரவேற்பு அளிக்க 20,000 பேர் கூடும் வசதி உள்ளது. ஆனால், அவர்களுக்கு இடமளிக்க முடியவில்லை’’என்று கூறினார்.

முன்பு நரேந்திர மோடி பங்கேற்ற மைதானத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்றதை அவர் நினைவு கூர்ந்தார். ஜோ பைடன், பிரதமர் மோடியிடம், உங்கள் ஆட்டோகிராப் வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தை இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தினார். ஜப்பானில், ஹிரோஷிமாவில் காந்திஜியின் மார்பளவு சிலையை பிரதமர் திறந்து வைத்தார். இது அமைதி மற்றும் வன்முறையற்ற இந்திய மதிப்புகளைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த ஒரு மொழியியலாளர் மற்றும் கலைஞரையும் சந்தித்து பிரதமர் மோடி ஊக்கப்படுத்தினார்.

பப்புவா நியூ கினியாவில், அவர் உள்ளூர் மொழியான டோக் பிசினில் திருக்குறளை வெளியிட உள்ளார். ஆஸ்திரேலியாவில், சிட்னியில் உள்ள ஹாரிஸ் பார்க், இந்தியா மற்றும் இந்தியர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கின் சாட்சியமாக ’லிட்டில் இந்தியா’ இருப்பதால் இப்போது அங்கீகரிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com