‘ஜி-7’ உச்சி மாநாடு: பிரதமர் மோடி வெளியிட்ட 10 அம்ச திட்டங்கள் என்னென்ன?

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை நாம் உலகமெங்கும் உள்ள விவசாயிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்
‘ஜி-7’ உச்சி மாநாடு: பிரதமர் மோடி வெளியிட்ட 10 அம்ச திட்டங்கள் என்னென்ன?

ஹிரோஷிமா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, நேற்று கலந்துக் கொண்டு உரையாற்றினார். இதில், உணவு, சுகாதாரம், வளர்ச்சி பற்றிய 10 அம்ச திட்டங்களைக் குறித்து பேசி, ஏனைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

'ஜி-7' உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் 2-வது நாளான நேற்று இந்திய பிரதமரான மோடி கலந்துக்கொண்ட நிலையில், 'பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு ஒன்றாக பணியாற்றுதல்' என்ற அமர்வில கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதில் சுகாதாரம், ஆரோக்கியம், உணவு பாதுகாப்பு, தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்ட மோடி, உணவு, சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் 10 அம்ச திட்டங்களை நாம் பின்பற்றியாக வேண்டும் என கூறினார். உணவுகள் வீணாவதைத் தடுக்க வேண்டும். இது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை நாம் உலகமெங்கும் உள்ள விவசாயிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் ஆகிய பல்வேறு விஷயங்களைப் பற்றி கலந்துரையாடினார்.

மேலும் உணவு, சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் 10 அம்ச திட்டங்களை பின்பற்ற அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி. அந்த அம்சங்கள் பின்வருமாறு,

1. குறு விவசாயிகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க கூடிய உணவு தானிய சாகுபடி முறைகளை உருவாக்குங்கள்

2. சிறுதானியங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் பலன்களுக்கான பாதை. ஊட்டச்சத்து, காலநிலை மாற்றம், தண்ணீர் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களை சிறுதானியங்கள் ஒரே நேரத்தில் தீர்க்கும்.

3. உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த உணவுப் பொருட்களை வீணாக்குவதை நிறுத்துங்கள்

4. உலகளாவிய உர விநியோக சங்கிலிகளில் உள்ள அரசியலை அகற்ற வேண்டும்.

4. உரங்களுக்கு மாற்று மாதிரியை உருவாக்குங்கள்

5. நெகிழ்வான சுகாதார அமைப்புகளை உருவாக்குங்கள்.

6. முழுமையான சுகாதார பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்றுங்கள்.

7. உலகம் முழுவதும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த டிஜிட்டல் சுகாதாரத்தை ஊக்குவியுங்கள்

8. சுகாதார நிபுணர்கள் போக்குவரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

10. நுகர்வோர் சார்பு மாதிரிகளால் உந்தப்படாமல், வளர்ந்து வரும் நாடுகளின் தேவைகளால் ஈர்க்கப்படுகிற வளர்ச்சி மாதிரிகளை உருவாக்குங்கள். இவ்வாறு 10 அம்ச திட்டங்களை பிரதமர் மோடி‘ஜி-7’ உச்சி மாநாட்டில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com