2வது முறை சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை: ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி- சிக்கலில் அசோக்

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பு கால அவகாசம் கேட்க உள்ளதாக தகவல்
அசோக் -செந்தில் பாலாஜி
அசோக் -செந்தில் பாலாஜி

ஐடி சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி 2ம் முறையாக ஆஜராகவில்லை என தகவல் வெளியான நிலையில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பு கால அவகாசம் கேட்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவரது சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராக 2 வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கல் வெளியானது.

கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர். சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைப்படி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பைபஸ் அறுவை சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதது. அடுத்து சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து காவிரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகுமாறு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அசோக் தரப்பு கால அவகாசம் கேட்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com