ஓ.பன்னீர்செல்வம் இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி இருக்கும் என வைத்திலிங்கம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்வர் ஆக்கியது டி.டி.வி தினகரனும், சசிகலாவும் தான்.
எடப்பாடி பழனிசாமி நாலரை ஆண்டுகள் முதல்வராக இருந்ததற்கு உறுதுணையாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவர்கள் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாய் இருக்கும். எடப்பாடி பழனிசாமி நன்றி இல்லாமல் பேசி வருகிறார் என வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார்.
மேலும், ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும், அ.தி.மு.க-வை வழி நடத்த முடியாது” என்றார்.