அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர், வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.சி.டி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர்கள் வா.புகழேந்தி மற்றும் மருது அழகுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, அடுத்த கட்ட பணிகள், கழக மாநாடு தேதி, தமிழக அரசியல் சூழ்நிலை, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து 4 மணி நேரம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வா.புகழேந்தி, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், மாநாடு, பொதுக் கூட்டங்கள் போன்ற பல முக்கிய விசயங்கள் பேசப்பட்டது.
மேலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்லி முதலமைச்சர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்.
அப்படிப்பட்ட நபர், இப்பொழுது உயிரோடு சிகிச்சை பெற்று வரும் குழந்தை முகமது மகீர் இறந்து விட்டதாக கூறி, இந்த ஆட்சியில் மருத்துவ நிர்வாகம் சரியில்லை எனவும் குழந்தையை இழந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உளவுயுள்ளார்.
தற்சமயம் உயிரோடு சிகிச்சை பெற்று வரும் குழந்தை இறந்து விட்டதாக பழனிசாமி கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது. குழந்தையின் குடும்பத்தை சார்ந்தவர்கள் எவ்வளவு துயரத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட தவறான செய்தியை அறிவித்து அரசியல் ஆதாயம் தேடும் எடப்பாடி பழனிசாமி இடம் ஒரு கோடி ரூபாயை குழந்தையை சார்ந்த குடும்பத்தினர் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் உயிரோடு இருக்கும் குழந்தை இறந்து விட்டதாக கூறியவர் எப்படி ஒரு கட்சி நடத்த முடியும் என்பதை தொண்டர்களும் மக்களும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.