தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலமையில், தமிழகத்தில் ஆட்சி பெறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தும், 3-ம் ஆண்டு துவங்கியதை தி.மு.க. கொண்டாடி வருகிறது. அதே வேளையில், தி.மு.க ஆட்சி மீது தலைவர்கள் பலரும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
தமிழகத்தில், தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த இரண்டு ஆண்டில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தி.மு.க செயல்படுத்திள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, அன்றைய தினமே மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் கோப்பில் கையெழுத்திட்டார். அன்று முதல் இன்று வரை பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இதேபோன்று பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க ஆட்சி மீது தலைவர்கள் பலரும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், 'சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தோல்வி அடைந்த தி.மு.க அரசு' என குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல, அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.