நாமக்கல்: தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி பின்னணி

தி.மு.க. முன்னாள் கவுன்சிலரும், தற்போதைய நகர துணைச் செயலாளருமான தேவிபிரியா கடன் பிரச்னையால் மகள் மற்றும் கணவர் அருண் லாலுடன் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேவிபிரியா
தேவிபிரியா

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்லால். இவர், ராசிபுரத்தில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், ஏற்கனவே திமுகவில் வார்டு பிரதிதியாக இருந்து வந்தார்.

இவரது மனைவி தேவிபிரியா. இவர் தற்போது ராசிபுரம் நகராட்சியில் 13வது வார்டு திமுக கவுன்சிலவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகள் மோனிகா (18) கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று 11ம் தேதி இரவு அருண்லால், நகைக்கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவில் அருண்லால், அவரது மனைவி தேவி பிரியா, மகள் மோனிகா ஆகியோர் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இன்று காலை கடை திறக்க அருண்லால் வராததால், கடை பணியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் அவர்களது உறவினர்கள் அங்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் தேவி பிரியா அவரது கணவர் மற்றும் மகள் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கடன் பிரச்னையால் விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்டமாக தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com