வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வளர்ச்சி பணிகளை கவனிப்பதற்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் ஏற்கெனவே பொறுப்பு அமைச்சர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் மாவட்ட பொறுப்புகளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் பல மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி, கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மற்றும் நாகைக்கு பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் இனி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக தொடர்வார். நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நியமிக்கப் பட்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி, இயற்கை சீற்ற நேரத்தில் அவசர கால பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.