தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோதமாக பண பரிமாற்ற வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் கிழமை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணமுராரி மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.